சனி 18 ஏப்ரல் 2020 வவ்வால்கள் மீது ஏன் இந்த வீண்பழி ? வாசகர்கள் கருத்து ஜே.கார்த்திக் ராஜா, கோவில்பட்டி, ஐயா, வவ்வால்கள் மீது ஏன் இந்த வீண்பழி ?- இந்து தமிழ் நாளிதழில் இன்று வெளியான தங்களின் கட்டுரையை படித்தேன், வெகு பிரமாதம்..எங்கள் வீட்டருகே சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் பல ஆண்டு காலமாக வாழ்கின்றன. அவைகளால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.என்னுடைய பயம் எல்லாம் நம்மால் அவைகளுக்கு பாதிப்பு வந்து விடும் என்பது தான்... M.SUNDARAVADIVELU. SATHYAMANGALAM. அன்புடையீர்,வணக்கம். நலம். நலமறிய ஆவல். தமிழ் இந்து நாளிதழில் வவ்வால் குறித்து , சமூக விழிப்புணர்வு கட்டுரை படித்தேன். மிகச் சிறப்பு. வவ்வால், ஆந்தை, இவற்றை கண்டால் ஒரு வித , அலர்ஜி மக்களுக்கு. அவை இந்த சுற்றுச்சூழலுக்கு , தங்கள் சிறப்பான பங்களிப்பை ஆற்றுகிறது. காடுகளும், மலைகளும், . பூச்சிகளும், நீர்வீழ்ச்சிகளும், 'விலங்குகளும், மனிதகுலத்தை வாழ வைக்கிறது. எனது நன்றிகள். க. நடராஜன் அன்புள்ள மதி கட்டுரை படித்தேன். பாராட்டுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் Nipah என்ற நோய் கேரளா வில் சில உயிர்களைக் கா...