வவ்வால்கள் மீது ஏன் இந்த வீண்பழி ?

சனி 18 ஏப்ரல் 2020
வவ்வால்கள் மீது ஏன் இந்த வீண்பழி ?





வாசகர்கள் கருத்து

ஜே.கார்த்திக் ராஜா, கோவில்பட்டி,

ஐயா, வவ்வால்கள் மீது ஏன் இந்த வீண்பழி ?- இந்து தமிழ் நாளிதழில் இன்று வெளியான தங்களின் கட்டுரையை படித்தேன், வெகு பிரமாதம்..எங்கள் வீட்டருகே சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் பல ஆண்டு காலமாக வாழ்கின்றன. அவைகளால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.என்னுடைய பயம் எல்லாம் நம்மால் அவைகளுக்கு பாதிப்பு வந்து விடும் என்பது தான்...


M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
அன்புடையீர்,வணக்கம். நலம். நலமறிய ஆவல். தமிழ் இந்து நாளிதழில் வவ்வால் குறித்து , சமூக விழிப்புணர்வு கட்டுரை படித்தேன். மிகச் சிறப்பு. வவ்வால், ஆந்தை, இவற்றை கண்டால் ஒரு வித , அலர்ஜி மக்களுக்கு. அவை இந்த சுற்றுச்சூழலுக்கு , தங்கள் சிறப்பான பங்களிப்பை ஆற்றுகிறது. காடுகளும், மலைகளும், 🐦. பூச்சிகளும், நீர்வீழ்ச்சிகளும், 'விலங்குகளும், மனிதகுலத்தை வாழ வைக்கிறது. எனது நன்றிகள்.

க. நடராஜன்

அன்புள்ள மதி
கட்டுரை படித்தேன். பாராட்டுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் Nipah என்ற நோய் கேரளா வில் சில உயிர்களைக் காவு கொண்டபோது பழம் தின்னி வவ்வால்கள் மூலமாக அது பரவுவதாக ஒரு கருத்து நிலவியது. அது உறுதிசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அப்போது உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அறிக்கையில் வவ்வால்கள் தங்களுடைய வாழ்விடங்களை விட்டு துரத்தப்படும் (மனிதர்கள் முயற்சியால்) வேளையில் மற்ற இடங்களை நாடும்போது அவைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல், பசி மற்றும் பிறவகை பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறது. அப்போது இந்த வைரஸ் அதிகம் உற்பத்தியாகி சிறு நீர் மற்றும், எச்சில் வழியே வெளியேறுகிறது. என்று கூறியது. ஆனால் மனிதர்களை எப்படி அது பாதித்தது என்பது தெளிவாக்கப்பட வில்லை. இப்போது உலகை ஆட்டிவைக்கும் கரோனா வவ்வால்களால் பரவியது என்று சொல்வது அது பற்றிய எந்த ஆராய்ச்சியும் நடத்திப் பெற்ற முடிவு அல்ல என்பதே உண்மை. எல்லா உயிரினங்களிலும் நுண் உயிர்கள் உண்டு. அவை மனிதர்களைத் தாக்குவதற்காக அல்ல. கட்டுரை வவ்வால்களின் பல இனங்களை விவரித்து அவை வாழும் இடங்களைக் கோடிட்டு மற்றும் தற்போது வலைத் தளங்களிலும் பிற இடங்களிலும் பரப்பப்படும் வதந்திகளை மறுத்து மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்துவதாய் அமைத்திருக்கிறது, காலத்திற்கு ஏற்ற கட்டுரை. மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். தொடரட்டும் இத்தகைய பணி. வாழ்த்துக்கள்.

Comments