தாமிரபரணி நீர்நிலைகள் புகைப்படப் போட்டி - Tamiraparani wetlands photo contest

 தாமிரபரணி நீர்நிலைகள் புகைப்படப் போட்டி

Tamiraparani Wetlands Photo Contest

போட்டியில் பங்கேற்பவர்கள் தென்காசி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி மற்றும் அதன் கிளை நதிகளைச் சார்ந்த சதுப்பு நிலத்தின் இயற்கைச் சூழலை புகைப்படம் எடுத்து அதிகபட்சமாக இரண்டு புகைப்படங்களை அனுப்பலாம்.

Participants may submit maximum 2 photographs taken from Tamiraparani Wetlands in Tirunelveli / Tenkasi / Thoothukudi districts only and he / she can send entries for any one of the three districts only.

புகைப்படங்கள் JPEG வடிவத்திலும் உயர் தெளிவுத் திறனுடனும் (3-9MB இடையே) இருக்க வேண்டும்.

Photo should be in JPEG format with high resolution (between 3-9 mb).

சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் போட்டியாளரால் எடுக்கப்பட்ட அசல் புகைப்படங்களாக இருக்க வேண்டும்.

Submitted photos must be original and taken by the contestant.

புகைப்படக் கோப்பில் பங்கேற்பாளரின் முழுப்பெயர், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Rename the photograph file with participant’s full name & mobile number.

போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்களில் பார்டர்கள், லோகோக்கள், பதிப்புரிமைக் குறியீடுகள், அடையாளம் காணக்கூடிய குறியீடுகள் மற்றும் கண்ணுக்குப் புலப்படும் எந்தக் குறியீடுகளும் இருக்கக் கூடாது.

There must be no border(s), logo(s), copyright marks, identifying marks, or any other visible references and/or marks on the image.

கைவினைத் திறன் அல்லது செயற்கருவியின் உதவியோடு நிலை மாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மொத்தமாக நிராகரிக்கப்படும்.

Manipulated Photo(s) will be rejected.

போட்டி அமைப்பாளர்கள் போட்டியில் பங்கேற்கும் புகைப்படங்களின் உண்மைத் தன்மைக்கு ஆதாரமாக மாற்றப்படாத EXIF மெட்டா டேட்டா, அசல் JPEG அல்லது மூலக் கோப்புகளை கேட்கும் பட்சத்தில் அனுப்பாத பங்கேற்பாளர்கள் சமர்ப்பித்த புகைப்படங்கள் மொத்தமாக நிராகரிக்கப்படும்.

Organizers reserve the right to ask for original JPEG or RAW files with unchanged EXIF metadata information for the purpose of authentication. An image maybe disregarded if this information cannot be provided.

ஓவ்வொரு மாவட்டத்திற்கும் (தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி) முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுவதுடன் பரிசுப் பெற்ற புகைப்படங்கள் 2022 உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் விழாவில் காட்சிப்படுத்தப்படும்.

1st, 2nd & 3rd prizes + 3 consolation prizes will be given in each category for each district (Tirunelveli, Tenkasi & Thoothukudi) and the awarded photographs will be displayed in Chennai on the occasion of World Wetlands Day 2022.

Link for the submission of photographs

https://forms.gle/nJZfhNut4RxxdtrN8 









Comments